கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்துகள் நடத்த விதிமுறைகள் வகுத்து பதாகை
கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்துகள் நடத்துவதற்கு விதிமுறைகளை வகுத்து பதாகை வைத்துள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியான கீரமங்கலம், கொத்தமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், மாங்காடு, வடகாடு, புள்ளாண்விடுதி, நெடுவாசல், பனங்குளம், குளமங்கலம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, கல்லாலங்குடி, கீழாத்தூர் மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி மொய் விருந்து.

இது ஒரு கலாசார விழாவாகவும், வருவாய் வழி விழாவாகவும் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சில லட்ச ரூபாய் வரை மொய் வசூல் செய்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல கோடி ரூபாய் வரை மொய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
விதிமுறைகள் பதாகை
வழக்கம் போல ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மட்டும் நடத்தப்படும் மொய் விருந்துகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் மொய் விருந்துகள் நடத்த முடியவில்லை. அதனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மார்கழி, தை மாதங்களில் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது.
தற்போது விவசாயிகளிடம் வருமானம் இல்லாததால் கோடிகளில் மொய் வாங்கியவர்கள் உள்பட பலர் தற்போது திரும்ப மொய் செய்ய முடியாமலும் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் ஆனி, ஆடி மாதங்களில் மட்டுமே மொய் விருந்து நடத்த வேண்டும்.
சமூகவலைதளம்...
5 வருடம் முடிந்த பிறகே மொய் விருந்து நடத்த வேண்டும். 3, 4 வருடங்களில் மொய் விருந்துகள் நடத்தக்கூடாது. இப்படி காலத்திற்கு முன்பே நடத்துபவர்களுக்கு போட்ட மொய் மட்டுமே செய்யப்படும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதாகையை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Related Tags :
Next Story