கரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
கரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதில் 55 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story