சேலம் அருகே பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்
சேலம் அருகே திருமலைகிரி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு வான வேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சர்ஜித் (வயது 4), தனது வீட்டின் மாடிக்கு சென்று பட்டாசு வெடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, பற்ற வைத்த பட்டாசு ஒன்று மேலே சென்று வெடிக்காமல் மொத்தமாக வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தது. இதில், சிறுவன் மீது பட்டாசு விழுந்ததில் அவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவனது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சிறுவனை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story