சுரண்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


சுரண்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 7 Feb 2021 5:09 AM IST (Updated: 7 Feb 2021 5:09 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர் திருடி சென்றார்.

சுரண்டை,:

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை தேரடி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் கனகராஜ் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 3-ந்தேதி தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். 

பின்னர் நேற்று கனகராஜ் குடும்பத்தினருடன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6¼ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில், சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story