சங்ககிரி அருகே மினி லாரி கவிழ்ந்து 20 ஆடுகள் செத்தன
சங்ககிரி அருகே மினி லாரி கவிழ்ந்து 20 ஆடுகள் செத்தன.
மினி லாரி கவிழ்ந்தது
கோவையை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 35). டிரைவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மினி லாரியில் 100 ஆடுகளை ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். இவருடன் கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கிண்கிணி (45) என்பவர் உடன் சென்றார்.
இந்த மினி லாரி சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் பைபாஸ் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.
20 ஆடுகள் செத்தன
இதில் மினி லாரியில் பயணம் செய்த கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கிண்கிணி (45) என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் மகேஷ்குமார் லேசான காயத்துடன் தப்பித்தார்.
மேலும் மினி லாரியில் ஏற்றி சென்ற 20 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ெசத்தன. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story