விருதுநகர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்


விருதுநகர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 7 Feb 2021 6:09 AM IST (Updated: 7 Feb 2021 6:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 13 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார் மாற்றம் 
இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-  அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சிவஜோதி, விருதுநகர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ரவீந்திரன் ஞானராஜ், அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்டதனித் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி 
சாத்தூர் தாசில்தார் சிவக்குமார், திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிப்காட் நில எடுப்பு தாசில்தார் வி.சிவக்குமார், திருச்சுழி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

 சிவகாசி நிலஎடுப்பு தாசில்தார் சந்திரசேகரன், காரியாபட்டி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி தாசில்தார் வெங்கடேசன், சாத்தூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்டம் 
 சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜாஉசேன், வெம்பக்கோட்டை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். ராஜபாளையம் ரெங்கசாமி, வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
வெம்பக்கோட்டையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய ரெங்கநாதன், ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.சாத்தூரில் பணியாற்றிய ராமசுப்பிரமணியன் சிவகாசிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வத்திராயிருப்பு 
 டாஸ்மாக் உதவி மேலாளராக பணியாற்றிய விஜயலட்சுமி, சிவகாசி சமூக பாதுகாப்பு திட்டதாசில்தாராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வத்திராயிருப்பு ராமதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி நகர நிலவரி அன்னம்மாள் வத்திராயிருப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story