பட்ஜெட்டில் விவசாயம், கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் தகவல்
பட்ஜெட்டில் விவசாயம், கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் கூறினார்.
கரூர்,
கரூரில் நேற்று மாவட்ட பா.ஜ.க. சார்பில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நன்மைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் புதிய வரிகள் இல்லாமல் ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயம், கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், ரெயில்வேக்கு அதிக திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story