கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவலன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கரூர்,
உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று தடுப்பு பணியில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை எடுத்து வருவதால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16-ந்தேதி முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி போடும் நிகழ்வை பிரதமர் நாடு முழுவதும் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் அன்றே, தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் மாவட்ட கலெக்டர் மலர்விழி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார் ஆகியோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின்னர் ஏராளமான போலீசாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story