புத்துணர்வு முகாமுக்கு தயாரான காளையார்கோவில் யானை
மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு காளையார்கோவில் யானை தயாரானது. அந்த யானைக்கு லாரியில் ஏற பாகன்கள் பயிற்சி அளித்தனர்.
காளையார்கோவில்,
தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகள் கலந்து கொள்கின்றன.
அந்த யாைனகளுக்கு நடைபயிற்சி, குளியல் பயிற்சி, சத்தான உணவுகள் அளிக்கப்படுகின்றன. இந்த முகாம் 48 நாட்கள் நடைபெறுகின்றன.
புத்துணர்வு முகாமிற்கு செல்வதற்காக காளையார்கோவில் ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோவில் யானை சொர்ணவல்லியை தயார்ப்படுத்தும் பணி நடந்தது. முகாமிற்கு லாரியில் ஏறி செல்வதற்காக கோவில் முன்பு உள்ள மேடையில் நின்று யானைக்கு லாரியில் ஏறி இறங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான பயிற்சியை யானைப் பாகன் சரவணன் வழங்கினார். அப்போது காளீஸ்வர குருக்கள், தேவஸ்தான கண்காணிப்பாளர் பால சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, மேட்டுப்பாளையம் யானைகள் முகாம் நாளை தொடங்குவதால் இன்று அதிகாலையிலேயே லாரி மூலம் சொர்ணவல்லி யானை அழைத்து செல்லப்படுகிறது என்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் காளையார்கோவில், குன்றக்குடி, திருப்பத்தூர் ஆகிய 3 கோவில்களில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு காளையார்கோவில் யானை சொர்ணவல்லி யானை இந்த முகாமிற்கு புறப்பட்டு செல்கிறது. குன்றக்குடி சண்முகநாதன் கோவில் யானை சுப்புலெட்சுமியும், திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் யானை சிவகாமியும் வயது முதிர்வு காரணமாக இந்த முகாமிற்கு செல்லவில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story