அரசு ஊழியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தினா்


அரசு ஊழியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தினா்
x
தினத்தந்தி 7 Feb 2021 7:08 AM IST (Updated: 7 Feb 2021 7:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூாில் 5-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்.

பெரம்பலூர்,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Next Story