வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம்- டி.வி. திருட்டு


வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம்- டி.வி. திருட்டு
x
தினத்தந்தி 7 Feb 2021 8:54 AM IST (Updated: 7 Feb 2021 8:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் மற்றும் டி.வி.யை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 55). இவர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். இதற்காக அங்கு குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். கடந்த 29-ந்தேதி புதுநடுவலூரில் உள்ள வீட்டிற்கு விஜயகுமார் வந்து சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை விஜயகுமாருடைய வீட்டின் உள்ளே கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து உடனடியாக விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மொட்டை மாடியின் கதவை உடைத்து...

இதையடுத்து சமயபுரத்தில் இருந்து விரைந்து வந்த விஜயகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம், வெள்ளி விளக்கு, எல்.டி.இ. டி.வி., குங்கும சிமில் ஆகியவை திருட்டு போயிருந்தது. மேலும் மர்மநபர்கள் வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து, அதன் வழியாக வீட்டிற்குள் வந்து, வீட்டின் கதவை உடைத்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே இதேபோல் கடந்த 2016 -ம் ஆண்டு விஜயகுமார் வீட்டில் திருட்டு நடந்ததாக அந்தப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story