வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராமையன் தலைமை தாங்கினார். சோமையா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், ஆர்.சி.ரெங்கசாமி, சி.ஜீவானந்தம், வீரப்பன், வீரமணி, முருகானந்தம், உலகநாதன், விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story