கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 7 Feb 2021 11:44 AM IST (Updated: 7 Feb 2021 11:50 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்.

எடப்பாடி,

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். 1500 மூட்டை பருத்தி  ரூ.3 கோடிக்கு ஏலம் சென்றது. டி.டி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 950 முதல் ரூ.9 ஆயிரத்து 19 வரை ஏலம் சென்றது. பி.டி.ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 870 முதல் ரூ.6 ஆயிரத்து 909 வரை ஏலம் சென்றது. இதில் சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்தி மூட்டைகளை ஏலம் எடுத்தனர்.


Next Story