வேலூரில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வேலூரில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2021 8:00 PM IST (Updated: 7 Feb 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

இந்திய மருத்துவர் சங்கம் வேலூர் கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க முன்னாள் மாநில தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வேலூர் கிளை செயலாளர் டாக்டர் நைலேஷ், பொருளாளர் டாக்டர் ஜலாலு, துணைத்தலைவர்கள் டாக்டர் நர்மதா, கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்படிப்பு படித்து விட்டு அறுவை சிகிச்சை செய்யலாம் என்பதை கண்டித்தும், அந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் டாக்டர் மகேஸ்வரன், இந்திய பல்மருத்துவக்கழகம் வேலூர் கிளை மாநில நிர்வாகி டாக்டர் முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story