தூத்துக்குடி சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் விமானம், விநாயகர், பேச்சியம்மாள், சுடலைமாடசுவாமி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு செந்தில் சுவாமிகள் தலைமை தாங்கி, கும்பாபிஷேகத்தை நடத்தினார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story