பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிப்பு
9, 11-ம் வகுப்புகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு நெல்லையில் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
9, 11-ம் வகுப்புகள் இன்று தொடங்கப்படுவதையொட்டி பள்ளிக்கூடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.
இன்று தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. வழக்கமாக வகுப்பறையில் குறைந்தது 40 முதல் 50 மாணவர்கள் வரை இருப்பார்கள். ஆனால் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 25 பேர் மட்டும் அமரும் வகையில் வகுப்பறை மாற்றியமைக்கும் பணி அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் நடந்து வருகிறது. பள்ளிக்கூடங்களிலும், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி நெல்லை மாநகர பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் சுகாதார பணியாளர்கள் பள்ளிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.
பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியும் மற்றும் சுத்தப்படுத்தும் பணியையும் செய்தனர்.
Related Tags :
Next Story