புன்னகையை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தியாகதுருகத்தில் புன்னகையை தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கண்டாச்சிமங்கலம்
சமூக பாதுகாப்புத் துறை, காவல் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியவை இணைந்து புன்னகையை தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன், கள்ளக்குறிச்சி உதவி தொழிலாளர் ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமை தாங்கி சாலையோரங்களில் சுற்றித்திரியும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலில் ஈடுபடும் குழந்தைகள் குறித்து பொதுமக்கள் 1098 என்ற எண்ணில் சைல்டு லைனை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகள் பெற்றோர் அல்லது அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆகாசதுரை, ஜெயமாலினி, காவலர்கள் கனகா, பிரியா, சவீதா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தியாகதுருகத்தில் உள்ள உணவகங்கள், துணிக் கடை, இனிப்பகம், மளிகை கடை ஆகியவற்றில் நடத்திய சோதனையில் 5 குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story