வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Feb 2021 10:56 PM IST (Updated: 7 Feb 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நாவற்குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் அன்பு என்கிற அன்பழகன் (வயது 54). இவர் குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்பழகன் மீது வழிப்பறி, கொள்ளை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் செஞ்சி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரின் இத்தகைய செயலை கட்டுப்படுத்தும் வகையில் அன்பழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அண்ணாதுரை அன்பழகளை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி போலீசார், அன்பழகனை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர். 

Next Story