பயிர்கள் பாதிப்பு பற்றி மண்டபம் யூனியன் பகுதியில் மத்திய குழு ஆய்வு
பயிர்கள் பாதிப்பு பற்றி மண்டபம் யூனியன் பகுதியில் மத்திய குழு ஆய்வு செய்தது.
பனைக்குளம்,
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் விரிவான கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வு குழு வருகை தந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி கிராமத்தில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் சப்- கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சேக்அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்பட வேளாண் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story