ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார்கள் பணியிட மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தனிப்பிரிவு போலீஸ்
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார்களை பணியிடம் மாற்றி, அவர்களுக்கு பதிலாக புதிய போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்த செந்தில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பணிக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆறுமுகம், சூரம்பட்டி போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணியிட மாற்றம்
மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றிய பழனிச்சாமி, ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பணிக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் தனிப்பிரிவு போலீசாக, அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் வேல்முருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்த உதய சூரியன், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவுக்கும், மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுரேஷ், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பணிகள் குறித்து விளக்கம்
இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சந்திரசேகர், ஈரோடு டவுன் போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஜனார்த்தனன், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் செல்வசுந்தரம், அதே போலிஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாகவும், கடத்தூர் போலீஸ் நிலைய நிலையத்தில் பணியாற்றி வரும் வேல்முருகன் அதே போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசாகவும் மாற்றப்பட்டு உள்ளனர். புதிதாக பொறுப்பேற்ற தனிப்பிரிவு போலீசாருக்கு அவர்களது பணிகள் குறித்து நேற்று தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் விளக்கி கூறினார்.
Related Tags :
Next Story