அணையில் மூழ்கிய கல்லூரி மாணவரின்கதி என்ன?


அணையில் மூழ்கிய கல்லூரி மாணவரின்கதி என்ன?
x
தினத்தந்தி 8 Feb 2021 2:31 AM IST (Updated: 8 Feb 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே அணையில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சேடபட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் கமலகண்ணன். அவருடைய மகன் கவுதம் (வயது 19). இவர், பழனியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

நேற்று விடுமுறை தினம் என்பதால் கவுதம், தனது சித்தப்பா சேகருடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றார். அணையில் 2 பேரும் குளித்து கொண்டிருந்தனர். 

அப்போது கவுதம் மட்டும் அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீரில் மூழ்கிய அவரை காணவில்லை. இதனால் சேகர், தனது அண்ணன் மகனை அணையில் தேடினார். ஆனால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

 இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயைணப்பு படையினர், அணையில் மூழ்கிய கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்று இரவு 7 மணி வரை தேடும் பணி நடந்தது. இருப்பினும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளதால் மாணவர் எங்கு மூழ்கினார் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் எங்களது தேடும் பணி தொடரும். இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மாணவரை தேடும் பணியில் ஈடுபடுவோம் என்றனர். 

இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story