கடலூரில், 6-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 39 பேர் கைது


கடலூரில், 6-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 39 பேர் கைது
x

கடலூரில், 6-வது நாளாக அரசு ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நேற்று 6-வது நாளாக கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

 நிர்வாகிகள் வெங்கடாசலபதி, கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வூதியர் சங்கம் கருணாகரன், துணை தலைவர் குலோத்துங்கன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 39 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story