நாமக்கல்லில் விபத்து கார் மீது ஏறி நின்ற லாரி


நாமக்கல்லில் விபத்து கார் மீது ஏறி நின்ற லாரி
x
தினத்தந்தி 8 Feb 2021 5:41 AM IST (Updated: 8 Feb 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விபத்து கார் மீது ஏறி நின்ற லாரி.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டி புதுகோம்பை பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 44). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று காலை காரில் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் இருந்து பஸ்நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நாமக்கல் பொன்நகர் பகுதியில் வந்தபோது டாரஸ் லாரி ஒன்று மெக்கானிக் பட்டறைக்கு செல்ல சாலையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தது. அதே சமயம் எதிர்திசையில் தண்ணீர் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்த லாரியின் டிரைவர் டாரஸ் லாரி மீது மோதாமல் இருக்க வலதுபுறமாக திருப்பி உள்ளார். இதில் கார் மீது தண்ணீர் லாரி மோதி ஏறி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பாலசந்தர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story