உடுமலை அருகே ஓடும் காரில் தீ விபத்து


உடுமலை அருகே ஓடும் காரில் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Feb 2021 5:48 AM IST (Updated: 8 Feb 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடுமலை,

உடுமலை எலையமுத்தூர் சாலையில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது காரில் ஏ.சி.ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு புகை வந்தது. 

உடனே டிரைவர், காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது திடீரென்று கார் தீ பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்புப்படைவீரர்கள், தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது.



Next Story