அ.தி.மு.க.விடம், இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவோம் - பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பேச்சு
அ.தி.மு.க.விடம், இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவோம் என்று பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கூறினார். பா.ஜ.க. சார்பில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் திருப்பத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர்,
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயம், உள்கட்டமைப்பு சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடியும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு தான் காரணம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் இருந்து பா.ஜ.க. இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story