சசிகலா இன்று சென்னைக்கு செல்வதால் தவுட்டுப்பாளையத்தில் போலீசார் குவிப்பு
தவுட்டுப்பாளையத்தில் போலீசார் குவிப்பு
சசிகலா இன்று (திங்கட்கிழமை) சென்னைக்கு செல்வதால் அவரது ஆதரவாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் பெங்களூருவுக்கு மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல இருக்கின்றனர். அப்போது அவர்களது வாகனத்தில் சசிகலாவின் புகைப்படங்களை ஒட்டிக்கொண்டு அ.தி.மு.க. கொடியினை பயன்படுத்திக் கொண்டு வாகனத்தில் செல்பவர்களைவழி மறித்து வாகனத்தில் உள்ள அ.தி.மு.க. கொடிகளை அகற்றி அனுப்பி வைக்கவும் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கரூர் மாவட்டம் தவுட்டுபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே ஏராளமான தடுப்புகளை வைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் ஏராளமான வாகனங்களை நிறுத்தும்போது அவர்களது ஆதரவாளர்கள் அங்கு போலீசாருடன் வாக்குவாதம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story