தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியா? விஜயகாந்த் மகன் தாராபுரத்தில் பேட்டி


தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியா? விஜயகாந்த் மகன் தாராபுரத்தில் பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2021 6:34 AM IST (Updated: 8 Feb 2021 6:37 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கலில் இருந்து தாராபுரம் வழியாக ஈரோட்டிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் சென்றார். அப்போது அவர் தாராபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாராபுரம்,

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு 
கூட்டணி தொடருமா? என்ற யூகத்துக்கு எல்லாம் பதில் கூற முடியாது நேரம் வரும்போது அறிவிப்போம்.  தி.மு.க.வுடன் கூட்டணியா? என இப்போது பதில் சொல்லமுடியாது. கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி  கருத்தை அறிந்து தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பது குறித்து பதில் அளிப்போம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். 
இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் குப்புசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மாவட்ட தொகுதி செயலாளர் அண்ணாதுரை உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story