காளையார்கோவில் அருகே, புனித செபஸ்தியார் ஆலய திருவிழா


காளையார்கோவில் அருகே, புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 8 Feb 2021 6:37 AM IST (Updated: 8 Feb 2021 6:41 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைப்பெற்றது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் மாலை நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவில்  சபையின் மாநிலத் தலைவர் அருட்தந்தை ஜோசப் செங்கோல் தலைமையில் காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் உள்பட 15 குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். 

திருப்பலி முடிந்தவுடன் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய சப்பரமும், புனித மிக்கேல் அதிதூதர் உருவம் தாங்கிய சப்பரமும், புனித ஆரோக்கிய அன்னையின் உருவம் தாங்கிய தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக எடுத்து வரப்பட்டன. இவ்விழாவில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம், அருட்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். திருப்பலி முடிந்தவுடன் சப்பர பவனி நடைபெற்றது.

Next Story