ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி ராஜா, மின் மோட்டார் பழுதை நீக்குவதற்காக மம்சாபுரத்தை சேர்ந்த தங்கேஸ்வரன் (வயது 45) என்பவரிடம் கூறினார்.
அவர் மின்மோட்டார் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story