310 பள்ளிகளில் 9,11-ம் வகுப்புகள் இன்று திறப்பு


310 பள்ளிகளில் 9,11-ம் வகுப்புகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 6:52 AM IST (Updated: 8 Feb 2021 6:54 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 310 பள்ளிகளில் 9,11-ம் வகுப்புகள் இன்று திறக்கப்பட்ட உள்ளதால் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 28-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜனவரி 19-ந் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இன்று(திங்கட்கிழமை) முதல் பள்ளிகளும், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு 

அதன்படி நாகை மாவட்டத்தில் 310 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாகை மாவட்டத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரிகளில் சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே  அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில்..

இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற இயலாது. மேலும் ஆசிரியர்களுக்கும், பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதில் சுழற்சி முறையில் பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story