கிருஷ்ணகிரியில் 6-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம் 62 பேர் கைது


கிருஷ்ணகிரியில் 6-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம் 62 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2021 7:31 AM IST (Updated: 8 Feb 2021 7:33 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் 6-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,


கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று 6-வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். 

62 பேர் கைது

சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story