பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக மைதானத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆனந்த்(காரைக்குடி), சோமசுந்தரம்(சிவகங்கை), துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரகு, ராமகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதைதொடர்ந்து கலெக்டர் ஒவ்வொரு வாகனத்திலும் ஏறி குழந்தைகள் அமர தேவையான இடவசதி உள்ளதா என்றும், வாகனங்களில் பள்ளி வாகனம் என்று எழுதப்பட்டுள்ளதா, வாகனங்களில் மஞ்சள் நிற பெயிண்டு அடிக்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். அத்துடன் அவசர காலங்களில் பயன்படும் கதவுகளை வெளியில் இருந்து திறக்கும் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். குறைபாடுகள் உள்ள வாகனங்களில் அவற்றை சரி செய்து புகைப்படம் எடுத்து அனுப்பும்படி தெரிவித்தார்.
Related Tags :
Next Story