காரிமங்கலத்தில் 400 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் அமைச்சர் வழங்கினார்
காரிமங்கலத்தில் நடந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 400 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா காரியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.
விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன கோழிக்குஞ்சுகளை வழங்கினார். அதன்படி ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 400 பயனாளிகளுக்கு தலா 25 விலையில்லா அசில் இன கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் நல்லாதரவு
விழாவில் அமைச்சர் பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பு 2020-21-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன கோழிக்குஞ்சுகள் வழங்க ரூ.62 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதன் மூலம் அந்த பயனாளியின் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து நல்லாதரவு வழங்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story