அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 15-ந்தேதி வரை நேரடி சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 15-ந்தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-ம் ஆண்டிற்கான சேர்க்கை இணையதள கலந்தாய்வு, மற்றும் நேரடி சேர்க்கை மூலம் கடந்த மாதம் 16-ந்தேதி வரை நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சாரப் பணியாளர், பொருத்துநர், கம்மியர், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் பழுது பார்த்தல், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், பற்றவைப்பவர், ஆடை தயாரித்தல், ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை வருகிற 15-ந்ே்ததி வரை சிவகங்கை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. நேரடி சேர்க்கைக்கு வரும் போது மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், 5 வண்ண நிழற்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள் தவறாமல் கொண்டு வர வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, விருப்பம் உள்ளவர்கள் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story