பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு


பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 10:43 AM IST (Updated: 8 Feb 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் இருந்த பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பலூர்,

2006-ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை அழிக்கும் விதமாக, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 179 வாக்குப்பதிவு எந்திரங்கள், 904 கட்டுப்பாட்டு கருவிகளை சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கும் பணி நேற்று மாலை நடந்தது. இந்த பணி பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

Next Story