கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 8 Feb 2021 11:01 AM IST (Updated: 8 Feb 2021 11:52 AM IST)
t-max-icont-min-icon

ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிப்பிபாறை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிப்பிபாறை ஊராட்சி மன்றம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

தாயில்பட்டி, 

ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிப்பிபாறை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிப்பிபாறை ஊராட்சி மன்றம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.வி.கே. ராஜூ முன்னிலை வகித்தார். குணசேகரன், வரவேற்றார். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மாலைக்கண் நோய் உள்ளிட்ட கண் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வால்சாபுரம், மேலசத்திரம், கீழ சத்திரம், முக்கூட்டுமலை, சிப்பிபாறை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு 16 பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story