இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனினும் தை மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த மாதங்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தை மாத ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாமி தரிசனம்
இதில் திருவேங்கடம், தென்காசி, தூத்துக்குடி, விளாத்திகுளம், திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளதால் திரளான மாணவர்களும், பெற்றோருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story