விரைந்து நெல் கொள்முதல் செய்யப்படுமா?
சேத்தூர் அருகே விரைந்து நெல் கொள் முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனா்.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள தேவதானம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தாமதமாக நெல் கொள் முதல் செய்யப்படுகிறது. ஆதலால் விவசாயிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தாமதம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தேவதானம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதனையடுத்து அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு ஒரு வார காலம் மும்முரமாக விவசாயிகளின் நெல் மூடைகள் வாங்கப்பட்டது. இதையடுத்து தற்போது கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
நடவடிக்கை
எனவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இங்கு கொண்டு வந்து காத்திருக்கின்றனர். எனவே இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தேவதானம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தாமதம் இன்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story