மேட்டுப்பாளையத்துக்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை பயணம்


மேட்டுப்பாளையத்துக்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை பயணம்
x
தினத்தந்தி 8 Feb 2021 11:37 AM IST (Updated: 8 Feb 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக மேட்டுப்பாளையத்துக்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை புறப்பட்டது.

மன்னார்குடி,

தமிழகம் முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் உடல் மற்றும் மனம் நலம் பெற தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் இன்று(திங்கட்கிழமை) முதல் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மடங்களை சேர்ந்த யானைகள்  பங்கேற்கின்றன. 

செங்கமலம் யானை பயணம்

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள  ராஜகோபாலசாமி கோவில் செங்கமலம் யானை 48 நாள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக லாரி மூலம் நேற்று காலை புறப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட யானைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story