திருப்புவனத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


திருப்புவனத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 11:40 AM IST (Updated: 8 Feb 2021 11:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்புவனம்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை நடத்தி அதில் கலந்துகொள்ளும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். 

இதையொட்டி நேற்று காலை தென்காசி மாவட்டத்திலும், மாலை விருதுநகர் மாவட்டத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதுரை வழியாக சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தார். இதையடுத்து திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின் பூவந்தி மற்றும் சிவகங்கை வழியாக திருப்பத்தூர் வந்தடைந்தார். 
முன்னதாக திருக்கோஷ்டியூர் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.தென்னரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிக்காக அங்கு புறப்பட்டு சென்றார்.

Next Story