விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை சார்பில் வாகனத்தில் தீப்பிடித்தால் அணைப்படி எப்படி? என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைத்து பாதுகாப்பாக தப்பிப்பது எப்படி? என்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சியினை ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காண்பித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது டிரைவர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜாஸ்மின், தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி, அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story