சாலை வசதி ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை


சாலை வசதி ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2021 11:56 AM IST (Updated: 8 Feb 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

சாலை வசதி ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பிலியபுரம், 

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை அடர்ந்த பசுமையான வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை உப்பிலியபுரம், சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 17 கி.மீட்டர் தார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இது திருச்சி மாவட்டம் தென்புற நாடு ஊராட்சியிலுள்ள 16 கிராமங்களுக்கும், சேலம் மாவட்டத்திலுள்ள 20 கிராமங்களுக்கும், ஏறக்குறைய 15 ஆயிரம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமக உள்ள பிரதான இணைப்பு சாலையாகும். மோசமான நிலையில், குண்டும், குழியுமாக உள்ள இச்சாலை, தானிய விளை பொருட்களை ஏற்றிச்செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏறக்குறைய 10 வருடங்களாக எந்த ஒரு பராமரிப்புமின்றி உள்ள சாலையை புதுப்பித்து செப்பனிட, மலைவாழ்மக்கள் 20 பேர் கொண்ட குழுவினா் அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Next Story