பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு


பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 8 Feb 2021 4:11 PM IST (Updated: 8 Feb 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரித்த பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களை கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டினார்.

வேலூர்

மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரித்த பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்களை கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டினார்.

மக்கள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பெற்று மனு பதிவு செய்யப்பட்டது.

ராமேஸ்வரத்தில் நேற்று  நடைபெற்ற செயற்கைகோள் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 சிறிய செயற்கைக்கோள்கள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.

மாணவர்களுக்கு பாராட்டு

அதன்படி வேலூர் மாவட்டத்தில் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேவேந்திரன், கவுதம் ஆகியோர் தயாரித்த செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2 மாணவர்களும், மக்கள் குறை திர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் தலா ரூ.25 ஆயிரம் ஊக்கப்பரிசை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில், செதுவாலை வல்லண்டராமம் பகுதியில் நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் அளித்துள்ள மனுவில், சுமார் 67 குடும்பங்களாக வசித்து வருகிறோம். சிலருக்கு மட்டுமே வீடுகள் உள்ளது. சுமார் 35 குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் கிடையாது. எனவே எங்களுக்கு வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story