சாத்தனூர் அணையிலிருந்து 90 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்
சாத்தனூர் அணையிலிருந்து 90 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வாணாபுரம்
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையில் இருந்து ஒவ்வொரு வருடமும் விவசாய பாசனத்துக்கும், குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வாணாபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைதெரிவித்தனர்.
90 நாட்கள் திண்ணீர் திறக்க வேண்டும்
அப்போது வரும் வாரத்தில் தண்ணீர் திறந்தால் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற முடியும். 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள் பிரதான கால்வாய் முதல் கிளை கால்வாய் வரை அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி ஏரிக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில் தற்போது அணையில் தண்ணீர் 110 அடி மட்டும் உள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் தண்ணீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் அருணா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story