ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, புதிய ரேஷன் அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, பொது இடம் ஆக்கிரமிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 375 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனு நீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய் துறை அம்மா திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தாரகேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) சத்தியபிரசாத், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
Related Tags :
Next Story