பழனியில் பக்தர்களை கவர 'செல்பி ஸ்பாட்'
பக்தர்களை கவர 'செல்பி ஸ்பாட்'
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி கோவில் வெளிப்பிரகாரம், வையாபுரிகுளம் ஆகிய இடங்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இந்தநிலையில் பழனிக்கு வரும் முருக பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் 'செல்பி ஸ்பாட்' என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடிவாரம் தண்டபானி நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் 'நம்ம பழனி' என்ற வாசகங்களுடன் பெயர் பலகை மின்விளக்குடன் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழும் வகையில் இந்த செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.
இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பகலில் மட்டுமின்றி இரவிலும் அந்த இடங்களில் நின்று பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர் என்றார்.
Related Tags :
Next Story