9, 11-ம் வகுப்புகள் திறப்பு: அனைத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்


9, 11-ம் வகுப்புகள் திறப்பு: அனைத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்
x
தினத்தந்தி 8 Feb 2021 4:45 PM GMT (Updated: 8 Feb 2021 4:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. 9, 11-ம் வகுப்புகளும் திறக்கப்பட்டன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள்  தொடங்கியது. 9, 11-ம் வகுப்புகளும் திறக்கப்பட்டன.
 
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஏற்கனவே கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் செயல்பட தொடங்கின. அதே போன்று 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

கல்லூரிகள் தொடங்கியது
இந்த நிலையில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகள் தொடங்கின. இதனால் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முழுமையாக செயல்பட தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்திப்பதற்காக மாணவ-மாணவிகள் ஆர்வமும் வந்தனர்.

இதே போன்று 9, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லத் தொடங்கினர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி வழங்கப்பட்டது. அனைவரும் முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர். வகுப்புகளில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளி கடைபிடித்து அமர்த்து இருந்தனர்.

Next Story