தேனி அருகே ஆட்டோ மீது மினி லாரி மோதி 5 பேர் படுகாயம்
தேனி அருகே ஆட்டோ மீது மினி லாரி மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி:
தேனி அருகே குன்னூர் அன்னை இந்திரா காலனி, ஓடைத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (40), பஞ்சவர்ணம் (60), புஷ்பகுமார் (37), சுப்பிரமணி (60) ஆகிய 4 பேரை சவாரி ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தேனியில், மதுரை ரோட்டில் உள்ள தனியார் மில் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த மினி லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த டிரைவர் மகேந்திரன் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் மினி லாரி டிரைவரான தேவாரம் அருகே தே.மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் (42) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story