மீனவர்களின் கடனை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்
மீனவர்களின் கடனை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்
ராமேசுவரம்
மீனவர்களின் கடனை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.
விலையில்லா சைக்கிள்
ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ராமநாதபுரம் மணிகண்டன் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் என பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகளின் கஷ்டங்களை துயரங்களையும் போக்கும் வகையில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம்
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் அப்துல்கலாம் பெயரில் ராமேசுவரத்தில் அரசு கலைக்கல்லூரி என பெற்று தந்துள்ளேன். அதுபோல் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுடன் ரூ.36 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. விமான நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ராமேசுவரத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதோடு மக்களின் வாழ்வாதாரமும் முன்னேற்ற பாதையில் இருக்கும்.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் பெற்றுள்ள கடனையும் ரத்து செய்ய வேண்டுமென முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன். மாணவர்கள் பாடப்புத்தகம் மட்டுமல்லாமல் பொது அறிவு சார்ந்த அனைத்து புத்தகங்களையும் படிப்பதில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story