வெள்ளகோவில் அருகே தாய் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வெள்ளகோவில் அருகே தாய் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வெள்ளகோவில்:-
வெள்ளகோவில் அருகே தாய் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய் -மகள்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மடாமேடு பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 90). இவருக்கு பழனியம்மாள் (70), நல்லமுத்து (65) என்ற 2 மகள்களும், மணி (56) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
வீரம்மாளின் கணவர் வேலுச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவரது மகள் பழனியம்மாளுக்கு திருமணம் முடிந்த 2 ஆண்டிலேயே தனது கணவர் சுப்பிரமணியத்தை விட்டு பிரிந்து வந்து விட்டார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நல்லமுத்து நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இதனால் வீரம்மாள் மற்றும் இவரது மகள் பழனியம்மாள் ஆகியோர் மணி பராமரிப்பில் இருந்து வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அவர்கள் இருவரும் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர், இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரம்மாள், பழனியம்மாள் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்திருந்தனர், நேற்று காலை மணியின் மருமகள் சரண்யா அவர்களுக்கு காபி கொடுக்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரம்மாள், பழனியம்மாள் இருவரும் வீட்டிலிருந்த விட்டத்தில், மாடுகளை கட்ட பயன்படுத்தும் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரண்யா அக்கம்பக்கத்தினருக்கம் குடும்பத்தினருக்கும் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளகோவில் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரம்மாள், பழனியம்மாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story